தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறுவதையொட்டி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் சேலத்தில் தொடங்கியுள்ளது.
விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுவதையொட்டி ஆத்தூர் அம்மம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாநாட்டுக்கு என அமைக்கப்பட்டு இருந்த தனி குழுக்களுக்கும் தற்காலிக தொகுதி பொறுப்பாளர்களும் பங்கேற்று உள்ளனர்.
தமிழகம் புதுச்சேரியில் இருந்து 2000 மேற்பட்ட பொறுப்பாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று உள்ளனர். காலை தொடங்கி 5 மணி வரை இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது இதில் மாநாடு வெற்றியடைய பொறுப்பாளர்களின் பங்கு என்ன என்பது குறித்தும் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் திறனாய்வாளர்களைக் கொண்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது
புதிய அரசியல் களத்தில் பங்கேற்றுள்ள தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் இதற்கு முன்பு நடைபெற்ற அரசியல் மாநாடுகள் எவ்வாறு நடைபெற்றன அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கொள்கை கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பது குறித்து திறனாய்வாளர்கள் எடுத்துரைக்க உள்ளனர். ஆலோசனை மற்றும் பயிற்சியில் என்ன முக்கியத்துவம் என்பதை அறிய தொண்டர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்
மாநாட்டிற்கான ஆலோசனை கூட்டம் நடைபெறுவதையொட்டி ஆத்தூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட தூரம் கட்சிக்கொடிகள் நடப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்ற பொறுப்பாளர்களும் ஆரவாரம் இன்றி அமைதியாக அமர்ந்துள்ளனர். ஆலோசனை கூட்டத்திற்கு வருகை தரும் பொறுப்பாளர்களை வரவேற்க மகளிர் அணியினர் உற்சாக வரவேற்பும் அளித்தனர்.