வானம் தோண்டிய குழியில் விழுந்த சினை பசுமாடு சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
மதுரை வடக்கு மாசி வீதி மேல பெருமாள் மேஸ்திரி வீதி மேஸ்தி வீதியில் செல்லத்தம்மன் கோவில் அருகே வீடு கட்டுவதற்காக வானம் தோண்டப்பட்டு இருந்தது. இதில் எதிர்பாராத விதமாக பசு மாடு ஒன்று சிக்கிக் கொண்டது. அதை மீட்கும் முயற்சியில் அங்கே சுவை இருக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சுமை இருக்கும் தொழிலாளர்கள் எவ்வளவு முயன்றும் சினையாக இருந்த பசு மாட்டை மீட்க முடியவில்லை. உடனடியாக மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்த பாலமுருகன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி பசுமாடு பத்திரமாக மீட்டனர்.
