மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட நாகமலை புறம் பகுதியில் பரமன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சுமார் இரண்டு வயது மதிக்கத்தக்க மான் ஒன்று கிணற்றில் தவறி விழுந்து விட்டதாக சோழவந்தான் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் கிணற்றில் விழுந்த மானை உயிருடன் மீட்டு வனத்துறை அலுவலர் ராஜேஷ் குமாரிடம் ஒப்படைத்தனர் இதேபோன்று சோழவந்தான் அடுத்து கருப்பட்டி கிராமத்தில் கோகுல் என்பவருக்கு சொந்தமான நாயின் தலையில் பானை மாட்டிக் கொண்டதால் நாய்
உயிருக்கு போராடியது நாயின் உரிமையாளர் கோகுல் மற்றும் அருகில் இருந்தவர்கள் பானையை வெளியே எடுக்க எவ்வளவோ முயற்சிக்கும் முடியாத நிலையில் சோழவந்தான் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.


அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் நாயின் தலையில் மாட்டியிருந்த பானையை லாவகமாக மீட்டு வெளியில் எடுத்தனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த நாய் மகிழ்ச்சியில் துள்ளி குதுத்து ஓடியது. இரு வேறு சம்பவங்களில் சோழவந்தான் தீயணைப்புத் துறையின் செயலை பொதுமக்கள் பாராட்டினர்.




