விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே தாயில்பட்டியில் சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்த இடம் மற்றும் குடோனை சீல் வைத்து 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்து இஞ்சி உள்ள பட்டாசுகளை அழித்து வருவாய்த்துறையினர் நடவடிக்கை ….
3 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள தாயில்பட்டி பசும்பொன்நகர் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து வெம்பக்கோட்டை காவல்துறையினர் உதவியுடன் வருவாய் துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
பசும்பொன்நகர் பகுதியில் ராஜசேகர் என்பவருக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக அனுமதி இன்றி பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டது தெரியவந்தது. ஆய்வு மேற்கொண்ட அலுவலர்கள் 5 லட்சம் பெறுமான பட்டாசுகளை பறிமுதல் செய்ததுடன் அப்பகுதியை சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். மேலும் அருகில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் பட்டாசு சேகரித்து வைத்திருந்த குடோனையும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இரண்டு இடத்திலும் சிவகாசி செல்லம் மோகன் என்பவர் வாடகைக்கு எடுத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்து சேகரித்து வைத்தது பெரிய வந்தது. இந்த சேதனையில் வெம்பக்கோட்டை காவல் ஆய்வாளர் நம்பிராஜன் மற்றும் சார்பு ஆய்வாளர் குருநாதன் மற்றும் தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கணேசன் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டனர். தயாரிப்பு மேற்கொண்ட பகுதிகளில் உள்ள முழுமை அடையாத பட்டாசு ரகங்களை தீயணைப்பு வாகனத்தின் மூலம் அளித்தனர் 5 லட்ச ரூபாய் வருமானம் உள்ள பட்டாசுகளையும் பறிமுதல் செய்து வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பு ஈடுபட்டதாக கட்டிட உரிமையாளர்கள் ராஜசேகர் மற்றும் பாலமுருகன் வாடகைக்கு எடுத்து பட்டாசு தயாரித்த சிவகாசியை சேர்ந்த மோகன் ஆகிய மூன்று நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கொண்டகோட்டை காவல்துறையின் விசாரணை நடத்தி வருகின்றனர்.