

மதுரையில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து நடவடிக்கை மேற்கொண்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மதுரை தெற்கு வாசல் தெற்கு மாசி வீதி சாலையில் மறவர் சாவடி கோவில் அருகே அமைந்துள்ளது டி ஜி எம் பிளாஸ்டிக் என்ற தனியார் பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இந்த பிளாஸ்டிக் குடோனில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த உதவி ஆணையர் செல்வின் மற்றும் மதுரை டவுன் மற்றும் திருப்பரங்குன்றம் தீயணைப்புத் துறையினர் மூன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் குடிநீர் லாரி மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த குடோன் பழைய கட்டிடம் என்பதால் தீ மளமளவென பற்றி எரிந்தது. முன்னேற்பாடு நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது மற்றும் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்து காரணமாக அப்பகுதியை புகை மண்டலமாக காட்சியளிக்கிறது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

