• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தீ விபத்து ..தீயணைப்புதுறையினர் துரிதமாக செயல்பட்டதால் அசம்பாவிதம் தவிர்ப்பு

ByKalamegam Viswanathan

Mar 15, 2023

கேஸ் குடோன் அருகே பற்றிய தீ உடனடியாக வந்த அனைத்து தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
மதுரை மாவட்டம் மாடக்குளம் பிரதான சாலையில் உள்ள அரசினர் மாணவர் விடுதி அருகே எரிவாயு சிலிண்டர் குடோன் உள்ளது .

இதன் அருகே உள்ள திறந்த முள் மற்றும் குப்பைகள் அடர்ந்த வெளிப்பகுதியில் திடீரென தீயானது பற்றி எரிந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.எதிரே அடுக்குமாடி அருகில் இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மக்கள் தகவல் அளித்ததன் பேரில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் தீயணைப்புத் துறையினர் நிலைய அலுவலர் பாலமுருகன் தலை மேலான தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து வந்து தீய அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.நேற்றைய தினம் இதே பகுதிக்கு அருகில் கார் உதிரி பாகங்கள் இருக்கக்கூடிய நிறுவனத்தில் தீ பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது