• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மறைந்த பத்திரிகையாளர் குடும்பத்துக்கு நிதியூதவி – ஆட்சியர்.

ByN.Ravi

Mar 14, 2024

மதுரை மாவட்டம் பத்திரிகைத் துறையில் 27 ஆண்டுகள் பணியாற்றி மறைந்த செய்தியாளரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து
பத்திரிகையாளர் குடும்ப நல நிதி உதவியாக ரூபாய் 3 இலட்சத்திற்கான காசோலை
மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா வழங்கினார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (13.03.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, பத்திரிகைத் துறையில் 27 ஆண்டுகள் செய்தியாளராக பணியாற்றி உடல் நலக்குறைவால் காலமான எஸ்.ஞானசேகரன் என்பவரது குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்திரிகையாளர் குடும்ப நல நிதி உதவியாக ரூபாய் 3 இலட்சத்திற்கான காசோலையை அன்னாரது மனைவி ஜி.தேவியிடம் வழங்கினார்.
தமிழ்நாடு அரசு பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் பருவ இதழ் ஊடகங்களில் பணியாற்றும் செய்தியாளர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பத்திரிகைத் துறையில் 20 ஆண்டுகள் பணியாற்றும் முழுநேர செய்தியாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம், குடும்ப ஓய்வூதியத் திட்டம், பத்திரிகையாளர் குடும்ப நல நிதித் திட்டம், அரசு அங்கீகார அட்டை, இலவசப் பேருந்து பயணத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் பத்திரிகைத் துறையில் 27 ஆண்டுகள் செய்தியாளராக பணியாற்றிய எஸ்.ஞானசேகரன் , உடல் நலக்குறைவால் காலமானார். அன்னாரது குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்திரிகையாளர் குடும்ப நல நிதி உதவியாக ரூபாய் 3 இலட்சம் வழங்க தமிழ்நாடு அரசால் உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.சௌ.சங்கீதா, மறைந்த எஸ்.ஞானசேகரன் மனைவி ஜி.தேவியிடம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்திரிகையாளர் குடும்ப நல நிதி உதவியாக ரூபாய் 3 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் தெ.சங்கீதா உடனிருந்தார்.