விருதுநகர் மாவட்டம் வில்லூர் அருள்மிகு ஸ்ரீசங்கிலி கருப்பசாமி, ஸ்ரீஅன்னை பராசக்தி காளியம்மன் திருக்கோவிலில் சிவகாசி வில்லூர் அன்னை பராசக்தி காளியம்மன் அன்னதானக் குழு நடத்தும் 18ஆம் ஆண்டு அன்னதான விழா நடைபெறுகிறது. அன்னதானத்தை தொடங்கி வைக்க வருகை தருமாறு அன்னதான கமிட்டி சார்பில், அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் அன்னதான குழுக்கமிட்டியினர் வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்று விழாவில் கலந்து கொள்ள வருகை தருவதாக உறுதியளித்தார். தொடர்ந்து, அன்னதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, ரூ.25ஆயிரம் நிதியுதவி வழங்கினர். கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
