சாதியை ஒழிக்க முடியாது, தீண்டாமையை ஒழிக்க முடியும் என்பதை தேசத் தந்தை மகாத்மா காந்தி நம்பினார் என திருமாவளவன் பேசினார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்தாண்டத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மாநில மத நல்லிணக்க இயக்க ஐம்பெரும் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் சிந்து குமார் தலைமை தாங்கினார். இந்த நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக சுவாமி தோப்பு பாலபிரஜாதிபதி அடிகளார் , காமராஜரின் பேத்தி கமலிகா காமராஜ் , விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டாளர்கள் திருமாவளவனுக்கு செங்கோல் பரிசு வழங்கினர்.

தொடர்ந்து பேசிய திருமாவளவன்..,
காமராஜர் மண், பெரியார் மண்ணும் ஒன்றுதான். காமராஜருக்கு பிரச்சாரம் செய்தவர் பெரியார். கிறிஸ்தவ, இஸ்லாமிய, இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாகவும், அடிகளார் பேசும் போது, தமிழர் முதல்வர் ஆகவேண்டும் என்று பேசி இருக்கிறார். இதன் மூலம் விடுதலை சிறுத்தை கட்சியை ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த விரும்புகிறார். திருமாவளவனை முதல்வர் ஆக்க அடிகளார் விரும்புவதாகவும் ,

காமராஜரின் பேத்தி கமலிகா காமராஜ் விடுதலை சிறுத்தையில் இணைந்தால் விடுதலை சிறுத்தை மேலும் வளர்சி அடையும் என்றும் பேசினார். விழாவில் நாடகம் , நடனம் உட்பட நிகழ்சிகள் நடைபெற்றது , சாதனையாளர்கள் கெளரவிக்கபட்டு விருதுகள் வழங்கப்பட்டன, ஏழைகளுக்கு நலத்திட்டங்களும் வழங்கப்பட்டனர். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
