• Sat. Jun 3rd, 2023

பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும்

Byவிஷா

Nov 26, 2021

ஒரு நாள் வகுப்பறையில் பாடம் நடத்திகொண்டிருக்கும் போது மாணவர்களிடம் இந்த கேள்வியை கேட்டார் “மன்னிக்க முடியாத கோபம் யார் மீதேனும் இருக்கிறதா உங்களுக்கு? சந்தர்ப்பம் கிடைத்தால் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா, நீங்கள்?” – மாணவர்களிடம் கேட்டார் ஆசிரியர்.


வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் “ஆமாம்… அய்யா” என்றார்கள். ஆசிரியருக்கு மிகுந்த வியப்பு, ஒவ்வொருவராக அழைத்து “மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?” என்று கேட்டார்.


ஒவ்வொருவரும் ஐந்து, பத்து என்று அடுக்கி கொண்டே சென்றார்கள் மாணவர்களுக்கு பழிவாங்கும் எண்ணம் தவறு என்று புரிய வைக்க நினைத்தார். ஒவ்வொரிடமும் ஒரு பையை கொடுத்தார், வகுப்பறைக்கு ஒரு கூடையில் தக்காளி கொண்டுவரப்பட்டது.


யார்மீது எத்தனை பழிவாங்கும் எண்ணம் உள்ளதோ அத்தனை தக்காளிகளை தாங்கள் பையில் எடுத்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்த தக்காளி பையை எப்போதும் உன் கூடவே இருக்கவேண்டும், தூங்கும் போதும் அருகிலேயே வைத்திருக்கவேண்டும் என கட்டளையிட்டார்.
ஒன்றும் அறியாமல் தலையை ஆட்டினார்கள் மாணவர்கள் . ஓரிரு நாட்கள் ஒரு குறையும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாட்களில் தக்காளிகள் அழுகி நாறத் துவங்கின. நாற்றம் அடிக்கும் பையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர்.


ஒரு கட்டத்தில்… ஆசிரியரிடம் சென்று, பைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர். மௌ;ளப் புன்னகைத்த ஆசிரியை, “நாற்றம் வீசுபவை தக்காளி மட்டுமல்ல அந்த நாற்றத்தைப் போலவே, உங்கள் பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன.
ஆகவே, பகை- பழியை மறந்து மன்னித்து விடுவதாக இருந்தால், தக்காளி பையை தூக்கி எறியுங்கள்” என்றார்! அப்போது தான் மாணவர்களுக்கு மனத் தெளிவு பிறந்தது.


அப்போதே தக்காளி பைகளை குப்பைத் தொட்டியில் வீசிய மாணவர்கள், பகை மறந்து ஒருவரையருவர் ஆரத் தழுவி கொண்டு வகுப்பறைக்கு திரும்பினர்.
நாம் ஒவொருவரும் இப்படி தான் பழிவாங்கும் எண்ணத்தோடு காத்திருக்கிறோம் தக்காளி பை நாற்றத்தோடு.
‘பகைமை மறப்போம் பகுத்தறிவோடு பயில்வோம் நன்றி|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *