• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பாராட்டு..,

ByG. Anbalagan

Apr 17, 2025

தமிழக அரசு கொண்டு வந்துள்ள சுய சான்றிதழ் முறை மிகவும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் 8 மாதங்களில் 80 ஆயிரம் அனுமதிகள் வழங்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்துகட்டுமான பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பாராட்டு..

எம் சேண்ட், பீ சேண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் கொண்டு வந்து விலை உயர்வை கட்டுபடுத்த வேண்டும் என்றும் நீதிமன்ற வழிகட்டுதல் படி ஆற்றுமணல் விற்பனைக்கு அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கோவை மண்டல தலைவர் ஸ்டாலின் பாரதி மற்றும் நீலகிரி மாவட்ட தலைவர் திலக்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலங்களை சார்ந்த கட்டுமான பொறியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது கட்டுமான பொருட்கள் மற்றும் கட்டுமான தொழில்களில் தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகள் அவற்றை தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்திற்கு பின் பேசிய மண்டல தலைவர் ஸ்டாலின் பாரதி: தமிழக அரசு கொண்டு வந்துள்ள சுய சான்றிதழ் முறை மிகவும் வரவேற்பை பெற்றுள்ளதாகவும் 8 மாதங்களில் 80 ஆயிரம் அனுமதிகள் வழங்கப்பட்டிருப்பதாக இந்த புதிய முறையில் ஒரே நாளில் அனுமதியை பெற்று விட முடியும் என்ற நிலையில் அதற்கான கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.

மேலும் கடந்த ஓராண்டில் இரண்டு முறை எம்சேண்ட் மற்றும் பீசேண்ட் விலைகளை கிரசர் நிறுவனங்கள் உயர்த்தி உள்ள நிலையில் மீண்டும் உயர்த்துவதாக அறிவித்துள்ளதால் கட்டுமான தொழில் மிகவும் பாதிக்கப்படும் என்ற அவர் எனவே கிரஷர் பொருட்களின் விலை உயர்வை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்து பழைய விலைக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

நீலகிரி மாவட்டத்தில் கட்டிடம் கட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் இயற்கையை பாதுகாக்கும் வகையிலும் தற்போதுள்ள 7 உயரத்தில் ஆன கட்டிடங்கள் கட்டுவதற்கு பதிலாக 10 மீட்டர் வரை கட்ட அனுமதிக்க வேண்டும் என்றும் மாஸ்டர் பிளான் திட்டம் கொடைகானலில் அமல்படுத்தி உள்ளது போல நீலகிரி மாவட்டத்திலும் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றார்.

மேலும் சுய சான்றிதழ் முறைப்படி நீலகிரி மாவட்டத்திலும் கட்டிடம் கட்ட அனுமதி கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 30 நாட்களுக்குள் அனுமதி தர வேண்டும் என்ற ஸ்டாலின் பாரதி அடுத்த கட்டமாக தமிழக முதல்வரை நேரில் சந்திக்க இருப்பதாகவும் தற்போது தமிழக அரசு கட்டிடங்களுக்கான நிறைவு சான்றிதழ் 3 வீடுகளுக்கு பதிலாக 8 வீடுகளாக உயர்த்தி வழங்கி இருப்பதாகவும் கட்டிடத்தின் உயரத்தை ஏழு மீட்டரில் இருந்து 12 மீட்டர் உயர்த்தி இருப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளால் மின் இணைப்பு பெற முடியாத கட்டிடங்களுக்கு கூட மின் இணைப்பு பெற்றிருப்பதாக கூறினார்.

தற்போது தமிழகத்தில் கட்டிட பொருட்களின் விலை உயர்வு என்பது பெரும் பிரச்சனையாக இருப்பதாகவும் எனவே எம்சேண்ட் மற்றும் பீசேண்ட் விலைகளை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவர் ஆற்று மணலை எடுக்க அனுமதியை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் அதற்காக ஏற்கனவே நீதிமன்றம் நிபந்தனைகளை வழங்கி உள்ளதாகவும் எனவே குறிப்பிட்ட அளவிலான மண்ணை ஆற்றில் இருந்து எடுத்தால் எம் சேண்ட் மற்றும் பீசேண்டின் தேவை குறைவதுடன் அவற்றின் விளையும் குறையும் என்பதால் அவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் கொண்டு வந்து விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.