• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Apr 20, 2024

உனக்கு மேலே உள்ளவனை
பார்த்து ஏங்காதே.. தாழ்வு
மனப்பாங்கு வரும்..! உனக்கு
கீழே உள்ளவனை ஏளனமாய்
பார்க்காதே.. தலைக்கனம் வரும்..!
உன்னை யாரோடும் ஒப்பிடாமல்
நீ நீயாக இரு..
தன்னம்பிக்கை வரும்..!

எப்படி வாழ்வான் பார்க்கலாம்
என்பவர்களுக்கு மத்தியில்..
இப்படித்தான் வளர்ந்தேன் என்று
வாழ்ந்து காட்டுங்கள்..!

உலகில் மிக எளிமையானது
பிறரிடம் குறை காண்பது..
உலகிலேயே மிகக் கடினமானது
தன் குறையை தானே உணர்வது..!

பாசத்தைக் கொண்டு பல நாள்
பயணிக்கலாம்.. நேசத்தை
கொண்டு நெடு நாள் பயணிக்கலாம்..
ஆனால் வேஷத்தைக் கொண்டு
ஒரு நாளும் பயணிக்க முடியாது..!

நம்மை பற்றி யார் என்ன
நினைத்தால் நமக்கு என்ன..?
நம்மை பற்றி நாம் அறியாததையா
அவர்கள் அறிந்திட போகிறார்கள்..!