

தினம் ஒரு பொன்மொழி
1. நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றமாக அமையலாம்.
2. ஒரு செயலுக்கான முயற்சியைத் தொடங்கியதும் ‘அது தேவைதானா?’ என்று ஒருபோதும் சிந்திக்காதீர்கள்.
3. உங்கள் கனவுகளை அடைய நீங்கள் எந்த இடத்தில் பிறந்தீர்கள் எந்தச் சூழ்நிலையில் வளர்ந்தீர்கள் போன்றவை ஒருபோதும் தடையாக அமையாது.. இலக்கை அடையும் வரை உங்கள் திறமையின் மீது நம்பிக்கை வைத்துப் போராடுங்கள்
4.. சிறப்பாகச் செய்து முடிக்க வேண்டிய எந்தச் செயலையும் அவசரமாகச் செய்து முடிக்க திட்டமிடாதீர்கள்.
5. நீங்கள் அடைய விரும்பும் ஒன்றை இலக்காக மட்டும் எண்ணாமல் வாழ்க்கையாக எண்ணுங்கள் இலக்குக்காக மட்டும் செயல்படுகிறீர்கள் எனில் உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் என்றே அர்த்தம்.
