சிந்தனைத் துளிகள்
யாரையும் யாராலும் திருத்த முடியாது.
அதனால் நீ முதலில் உன்னைத்திருத்து.
அடிக்கடி கோபம்கொள்கிறவன்
விரைவில் முதுமை அடைகிறான்.
உன்னை தாழ்த்திப்பேசும்போது
அடக்கமாய் இருத்தல் பெரிய சாதனையாகும்.
அமைதியாய் வாழ
நீ கண்டதையும் கேட்டதையும் பிறரிடம் கூறாதே.
இளமை தவறான பலவற்றை நம்புகிறது.
முதுமை சரியான பலவற்றை சந்தேகிக்கிறது.