• Thu. Dec 12th, 2024

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Nov 12, 2021

ஒரு விவசாயி தோண்டிய பாதி கிணறில் “பசு” ஒன்று தவறுதலாக விழுந்து விட்டது …!
பசுவை வெளியில் எடுப்பதற்கு எவ்வளவோ முயற்சிகளை, விவசாயி தனது நண்பர்களுடன் இணைந்து மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வியில் முடிந்தன..!


இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தனர்..?
அந்த பசுவை பாதி கிணறுக்குள் மண்னை போட்டு மூடி விடுவதாக .. பசுவின் மீது மண்னை போட்டனர்


பசு சற்றும் பதட்டமின்றி தான் எப்படியும் மேலே வருவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்தது.
விவசாயிகள் மண்னை அதன் மீது போட போட அது உடலை உதறி உதறி தன் காலுக்கு கீழ் சேர்த்து இறுதியில் தானாகவே வெளியே வந்தது…


“மற்றவர்கள் உன்னை ஒரு முடிவுக்கு கொண்டு வர சூழ்ச்சி செய்வதற்காக ஏளனம், நையாண்டி, பழிசுமத்தல், சேறு பூசுதல்” என்று பலவிஷயத்தில் வந்த போதிலும், அவற்றை அடித்தளமாக வைத்து முன்னேறினால் வெற்றி நிச்சயம்.