• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Dec 21, 2022

சிந்தனைத்துளிகள்

எதிர்பார்ப்பவன் ஏமாந்து போகலாம்..
அதனால் எதிர்பாராதவனே பாக்கியசாலி.!

முகங்களை கண்டு அன்பு காட்ட வேண்டாம்..
மனதினை கண்டு அன்பு செலுத்துங்கள்..
முகத்தின் அழகு மாறிவிட கூடியது..
மனதின் அழகு மாறுவதில்லை.!

உயிர் வாழ்ந்து கொண்டிருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை..
தன் உயிர் இருக்கும் வரை
முயற்சி செய்து கொண்டு இருப்பவனே மனிதன்.!

அடுத்தவர் ஆயிரம் வழிகளில் வாழலாம் ஆனால்
உனக்கென சிறந்த வழியை நீ தேர்ந்தெடுக்கும் வரையிலும்
வெற்றி என்பது உனக்கு கிடைக்காத ஒரு பொக்கிஷம்.!

உங்கள் இலக்கை அடைய இடைவிடாது முயற்சியுங்கள்..
இலக்கை அடையும் வரை.. அது உங்கள் அருகில் இருந்தால் அதிஷ்டம்..
வெகுதூரத்தில் இருந்தால் நம்பிக்கை..
இலக்கை அடையாமல் போனால் அனுபவம்.!