• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Oct 8, 2022

சிந்தனைத்துளிகள்

வாழ்க்கையைப் பற்றி ஆழமாக சிந்திக்க வைத்த வரிகள்…

1.வாழ்க்கைல நாம புரிஞ்சிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னதுனா, கடைசி வரைக்கும் ஒருத்தர முழுசா புரிஞ்சிக்க முடியாதுனு எவன் புரிஞ்சிக்கிறானோ அவன் தான் நிம்மதியா இருப்பான்.
ஒருவரை உங்களால் முழுமையாக 100 சதவீதம் புரிந்து கொள்ள முடியும் என்றால், அந்த மனிதரோடு உங்களால் உறவாட முடியாது.
அது, கணவன், மனைவி, அண்ணன், அக்கா, தங்கை, தம்பி, நண்பன், காதலி,.. இப்படி எந்த ஒரு உறவாக இருந்தாலும் சரி.
வாழ்க்கையின் சுவாரஸ்யமே அந்த புரிதலை நோக்கிய பயணத்தில் இருக்கக்கூடிய சுவாரஸ்யம் தான்.

2.நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய பல விஷயங்கள், பலருக்கும் இன்றைக்கு கனவாகவே தான் இருக்கிறது.

3.சந்தோஷம்னா என்னனு அதை அனுபவிக்கும் போது மனுஷனுக்கு தெரிவது இல்லை, அது இல்லாம போகுது பாருங்க அப்போ தான் தெரியும்.