• Sun. Nov 16th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

2 வயது பெண் குழந்தைக்கு தந்தை பாலியல் தொல்லை

ByR. Vijay

Mar 13, 2025

கரூரில் தான் பெற்ற 2 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக தந்தை கார்த்திகேயன் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறைக்கு அனுப்பினர் – குழந்தை மற்றவர்களுக்கு கூறி விடும் என்பதால் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டதால் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.

கரூர் மாவட்டம் சோமூர் கிராமத்தில் குடும்பத்துடன் வசிப்பவர் கார்த்திகேயன். இவருக்கு திருமணமாகி மனைவி, 4 வயதில் மகன், 2 வயதில் மகள் உள்ளனர். நேற்று குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, தான் பெற்ற 2 வயது பெண் குழந்தையை மாடிக்கு தூக்கிச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.

அப்போது, குழந்தை விழித்துக் கொண்டு அப்பா என கூப்பிட்டதால், மற்றவர்களிடம் சொல்லிவிடும் என நினைத்த கார்த்திகேயன், சிறுமியை மொட்டை மாடிக்கு தூக்கிச் சென்று தண்ணீர் தொட்டிக்குள் போட்டு விட்டு கீழே சென்று படுத்துக் கொண்டான். அப்போது, தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை காணாத சிறுமியின் அம்மா வீட்டு முழுக்க தேடியும் கிடைக்காததால், மொட்டை மாடிக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு சிறுமியின் உடைகள் இருந்ததை பார்த்த அம்மா, தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்த போது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் கிடப்பதை பார்த்து, அதனை தூக்கி கொண்டு காந்திகிராமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக அந்த கிராம மக்கள் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அழகு அலுவலர் புகாரின் பேரில் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணை முடிவில் தனது 2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் அடிப்படையில் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க போலீசார் அழைத்துச் சென்றனர்.

மேலும் குழந்தை ஆபத்தான நிலையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.