• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மகனை வெட்டிக் கொண்டு தந்தை கைது!!!

BySeenu

Apr 18, 2025

கோவை, குனியமுத்தூர் குறிச்சி நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் ஹோட்டல் கடை தொழிலாளி. இவர் மகன் விஜயகுமார் கூலித்தொழில். இவர் வேலைக்கு சரியாக செல்லாமல் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து உள்ளார். சமீபகாலமாக விஜயகுமார் மது போதையில் அடிமையாக இருந்து உள்ளார்.

மேலும் போதையில் தனது குடும்பத்தினருடன் வாக்குவாதத்துடன் செய்து வந்தார். பெற்றோர் அறிவுரை கூறியும் கண்டித்தும் அவர் திருந்தவில்லை, நேற்று இரவு மது போதையில் இருந்த விஜயகுமார். தந்தையிடம் மேலும் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்தார். அவரை கண்டித்தும் விஜயகுமார் கேட்கவில்லை அவரின் தொந்தரவு அதிகமானதால் கோபம் அடைந்த விஸ்வநாதன் வீட்டில் இருந்து அரிவாளை எடுத்து விஜயகுமாரின் கழுத்தை வெட்டினார்.

இதில் ரத்த வெள்ளத்தில் இறந்து விட்டார். இதை பார்த்து அக்கம், பக்கத்தினர் குனியமுத்தூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஸ்வநாதனை கைது செய்தனர். என் மகனை பாசமாக வளர்த்தேன் அவர் இப்படி போதைக்கு அடிமையாகி வீணாகிப் போவார் என தெரியவில்லை பெற்ற மகனை என் கையால் கொன்று விட்டேன் எனக் கூறி விஸ்வநாதன் போலீசாரிடம் கதறி அழுதார். இந்த சம்பவமாக பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.