



விடிய, விடிய ரமலான் நோன்பு சகர் விருந்து சிக்கன் பிரியானி, மட்டன் பிரியானி ரசித்து ருசித்த நோன்பாளிகள் !!!
உலகம் முழுவதும் ரமலான் மாதத்தில் நோன்பாளிகளுக்கு இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கோவை செல்வபுரம் பகுதியில், ஒற்றுமை நண்பர்கள் குழு சார்பாக, சகர் விருந்து நடைபெற்றது.


நேற்று மாலை 6:00 மணி முதல் சிக்கன், மட்டன் பிரியாணி தயார் செய்ய ஆரம்பித்த குழுவினர், இரவு 12 மணிக்கு மேல் பரிமாற ஆரம்பித்தனர். சிக்கன் பிரியானி, மட்டன் பிரியானி உள்ளிட்ட அசைவ உணவுகளை ஆவிப் பறக்க, விடிய விடிய அசைவ விருந்து பரிமாரினர். செல்வபுரம் பகுதி வாழ் மக்கள் மட்டுமின்றி, அருகாமை பகுதியில் வசிக்கும் நோன்பாளிகள் என பலரும் இந்த விருந்தில் பங்கேற்றனர்.
5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பந்தல் படையல் போட்டு சஹர் விருந்து படைத்தனர். இஸ்லாமியர்களின் நோன்பு காலமாக இருந்தாலும், இந்துக்களும் இதில் பங்கேற்று மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர். மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, ரைத்தா, சட்டினி, கேசரி என பல வகையான உணவுகளை பரிமாறி மகிழ்ந்தனர். நோன்பு காலத்தில் பசியை உணரும் தருவாயில் நோன்பாளிகள் பசியோடு இருக்கக் கூடாது என்பதனால் வருடம், வருடம் இந்த விருந்தை ஏற்பாடு செய்வதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
சஹர் விருந்து செல்வபுரம் பகுதியில் 25 ஆண்டாக நடத்தியதாக ஒற்றுமை நண்பர்கள் குழு தரப்பில் தெரிவித்து இருக்கின்றனர்.

