• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கியது விவசாயிகள் வேதனை..!

ByG.Suresh

Dec 18, 2023

சிவகங்கை அருகில் இருக்கக்கூடிய பனையூர் என்ற கிராமத்தில் 100 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்ட நெற்கதிர்கள் இரண்டு நாள் கன மழையில் தண்ணீரில் மூழ்கி சாய்ந்துள்ளது. விவசாயிகள் கடும் வேதனை தெரிவித்துள்ளார்கள்.

பனையூர் கிராமத்தில் ஒரு பகுதி குடியிருப்பு பகுதியாகவும் மற்றொரு பகுதி விவசாய பகுதியாகவும் இருந்து வருகின்றது. இங்கு 100 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்ட நெற்கதிர்கள் கடந்த இரண்டு நாள் தொடர்ந்து காற்றுடன் கூடிய கனமழை பெய்ததில் தண்ணீரில் மூழ்கி வயல்வெளிகள் தேங்கி உள்ள தண்ணீர் வடிக்க முடியாத சூழ்நிலையில் நெற்கதிர்கள் கடும் சேதம் அடைந்துள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு இருபதாயிரம் வரையில் செலவிடப்பட்டுள்ளதால் 100 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்பட்டதில் இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த இழப்பினை சரி செய்ய அரசு உதவி செய்யவில்லை என்றால் விவசாய தொழிலை கைவிட்டு விட்டு ஆடு மாடுகள் மேய்க்க செல்ல இருப்பதாகவும் அவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். 100 ஏக்கர் அளவில் நெற்கதிர்கள் முளைக்கட்டும் நிலையில் தண்ணீரில் மூழ்கியதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.