வாடிப்பட்டி பகுதியில் பேரனை முதல் கள்ளந்திரி வரை செல்லும் பெரியார் பாசன கால்வாய் மூலம் 45 ஆயிரம் ஏக்கரில் இருபோக விவசாயிகளால் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது இரண்டாம் போக பாசனத்திற்கு முல்லை பெரியாறு பாசன கால்வாயில் 900 கன அடி தண்ணீர் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் , ஆனால் பொதுப்பணித் துறையினர் 350 கன அடி மட்டுமே தண்ணீர் திறந்து விட்டுள்ளனர்.

இதனால் தண்ணீர் பற்றாக்குறை யால் பயிர்கள் அனைத்தும் விளைச்சலில் உள்ள நிலையில் தற்போது தண்ணீர் வழங்கவில் லை என்றால் பயிர்கள் கருகி விணாகி விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் திறக்க வலியுறுத்தி வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டி பங்களாவில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தை 100 மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இது குறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் ஜெயரட்சகன் கூறியதாவது:- எங்களுக்கு முல்லைப் பெரியாறு பாசன கால்வாயான பேரணை முதல் கள்ளந்திரி வரை 120 நாட்களுக்கு 900 கன அடி தண்ணீர் பொதுப்பணித்துறையினர் வழங்கவேண்டும்.ஆனால் எங்களுக்கு வழங்கியதோ 350 கன அடி தான் முறை பாசனம் மூலம் 70 நாட்கள் தண்ணீர் வழங்கினார்கள். இன்னும் 20 நாட்கள் தண்ணீர் வழங்க வேண்டும் நிலையில் இதில் 900 கன அடி தண்ணீர் கேட்கிறோம் ஆனால் 350 கன அடி மட்டுமே தண்ணீர் திறந்து விட்டுள்ளனர். இந்த நீரினை நம்பி விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது.

பயிர்கள் அனைத்தும் விளைச்சலில் உள்ளது. இந்த பற்றாகுறை ஏற்பட காரணம் 400 கன அடி தண்ணீர் வேறு பகுதிக்கு 15 நாட்கள் தொடர்ந்து கொடுத்துதான். தற்போது தண்ணீர் வழங்கவில்லை என்றால் பயிர்கள் கருகி விணாகிவிடும். கடன் வாங்கி விவசாயம் செய்து வரும் நிலையில் தண்ணீர் முறையாக திறந்து நெல் பயிர்கள் கருகி விடாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.



