மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் துணை வட்டாச்சியர் தாணுமாலயன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினர்.

தொடர்ந்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை உசிலம்பட்டி வட்டாச்சியர் பாலகிருஷணன் புறக்கணித்து வருவதாகவும், பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளாத நிலை நீடித்து வருவதாக குற்றம் சாட்டி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

பி.ஆர்.பாண்டியன் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உசிலம்பட்டி வட்டாச்சியரை கண்டித்தும் கண்டன கோசங்களை எழுப்பி வட்டாச்சியர் அலுவலக வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளின் இந்த போராட்டம் வட்டாச்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.




