வரும் 12ஆம் தேதி மேட்டூரில் இருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறக்க உள்ள நிலையில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பாசன ஆறுகள் வாய்க்கால்களை தூர்வார வேண்டுமென காரைக்கால் மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளர் பிரித்விராஜ் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.எம்.எச்.நாஜிம், எம்.நாகதியாகராஜன் ஆகியோர் மாவட்டத் துணை ஆட்சியர் அர்ஜுன் ராமகிருஷ்ணனை சந்தித்து மனு அளித்தனர்.

தண்ணீர் திறப்பதற்கு முன்பாக மாவட்டத்திலுள்ள அனைத்து பாசன ஆறுகள் மற்றும் வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி காவிரி நீரை விவசாயிகள் முறையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஏதோ கடமைக்கு செய்வது போல பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படுவதாக குற்றம் சாட்டு உள்ளனர்.
மாவட்டத்தில் எத்தனை பாசன வாய்க்கால்கள் உள்ளது என்பதை கண்டறிந்து உடனடியாக விவசாயிகளின் அவசர கூட்டத்தை கூட்டி எந்தெந்த வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என பொதுப்பணித்துறை வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகளை அழைத்துப் பேசி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.