• Mon. Mar 17th, 2025

சோழவந்தான் அருகே சாலச்சிபுரம் முதல் கணேசபுரம் வரை சாலையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை

ByKalamegam Viswanathan

Jul 5, 2023

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள சாலச்சிபுரத்திலிருந்து கணேசபுரம் செல்லும் குறுக்கு சாலை முற்றிலுமாக பெயர்ந்து ஆளை விழுங்கும் சூழ்நிலையில் உள்ளது. விவசாய நிலங்கள் நிறைந்த இந்த பகுதியில் போக்குவரத்து வாகனங்கள் அடிக்கடி செல்லும் சூழ்நிலை உள்ளது. பகல் வேளையிலேயே செல்வது சிரமமாக உள்ள சூழ்நிலையில் இரவு விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச செல்லும் விவசாயிகள் பள்ளங்களில் விழும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது இதனை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த பகுதியை சாலையை சீரமைக்க வேண்டும் இன்று இப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல கணேசபுரத்தில் இருந்து கருப்பட்டி ஊராட்சி மன்றம் வரை செல்லும் பாதையை சீரமைக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.