குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாவட்ட நிர்வாகத்தின் விவசாயம் சார்ந்த நடவடிக்கைகளை எதிர்த்து, குமரி மாவட்டம் நிர்வாகத்திற்கும், விவசாயிகள் இடையே ஒரு பனிப்போர் நடந்து வரும் நிலையில்,

சுக்கான்கடை அருகே’அனந்தனார் மேற்கு’ கால்வாய் பாய்கிறது. இந்த கால்வாய் அருகே 4_ வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கால்வாயின் அகலத்தை குறைத்து(சுருக்கி) சாலை அமைக்கும் பணியை கண்டித்ததுடன், பாசனத்துறை தலைவர் வழக்கறிஞர் வின்ஸ் இன்றோ தலைமையில், சாலைப்பணி நடக்கும் இடத்தில் கூடிய விவசாய சங்க பிரதிநிதிகள்,விவசாயிகள், சாலைப் பணிகளை தடுத்து நிறுத்தியதுடன் அந்த பகுதியிலே மாவட்ட நிர்வாகத்தின் செயலை கண்டித்து கண்டன குரல் எழுப்பினார்கள்.

குமரி பசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோவின் செயல் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் குமரி மாவட்ட விவசாய துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
மின்னல் வேகத்தில் வந்த விவசாய துறை, வருவாய் துறை, நெடுஞ்சாலை துறை, நீர்வளத்துறை அதிகாரிகள் சம்பவம் இடத்திற்கு வந்து,
கால்வாயில் கான்கிரீட் சுவர் கட்டும் பணியை உடனே தடுத்து நிறுத்தினான். விவசாயிகளின் திடீர் போராட்டம் அந்த பகுதியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியதை உணர்ந்த அதிகாரிகள் பணிகளை உடனே தடுத்து நிறுத்தியதுடன், நெடுஞ்சாலை ஆணைய நிர்வாகிகள் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ அரசியல் டுடே _விடம் தெரிவித்தது. அனந்தனார் மேற்கு கால்வாயின் குறுக்கே கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி நடந்தது.
கால்வாயை அடைத்து விட்டால் வயலுக்கு எப்படி தண்ணீர் செல்லும்? எனவே தான் பணிகளை நாங்கள் தடுத்தோம். தற்போது நடந்த பேச்சு வார்த்தையில் பாப்பனாங்குளத்தின் ஒரு பகுதியை தோண்டி தண்ணீர் செல்வதற்கு தற்காலிகமாக மட்டும் ஒரு வழியை ஏற்படுத்தி உள்ளது.

கான்கிரீட் சுவரை அகற்றுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்க வில்லை. தற்காலிகமாக கரைப்பகுதி தோண்டிவிடப்பட்டுள்ளதால் தண்ணீர் வரும்போது உயரமான அந்த குளத்தினுடைய கரைப்பகுதி உடைந்து சானலுக்குள் விழுவதோடு மீண்டும் தண்ணீர் செல்லாது. எனவே இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் நிரந்தர
தீர்வு காணவேண்டும் என்றார்.