மதுரை புறநகர் பகுதிகளான திருப்பரங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கோயம்புத்தூர் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு 6 நாட்களுக்கு மழை மற்றும் மிதமான கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை புறநகர் பகுதியான திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளான அவனியாபுரம் விமான நிலையம் வில்லாபுரம் கீரைத்துறை திருநகர் பசுமலை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

காலை முதல் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் தற்போது கன மழை பெய்து வருகிறது. சிறிது நேரம் பெய்த கனமழை ஆங்காங்கே உள்ள கழிவு நீர் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு நிறைந்து மழை உடன் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீருடன் கலந்த மழை நீரினால் பொதுமக்கள் மற்றும் மோகனா ஓட்டிகள் அச்சத்துடன் நோய் தொற்று பரவும் அபாயத்திலும் உள்ளனர்.