• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

விவசாய நிலங்களில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

ByJeisriRam

Jun 12, 2024

சின்னமனூர் – ஓடைப்பட்டி சாலையில் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டு

தேனி மாவட்டம், உத்தமபாளையம் தாலுகா, சின்னமனூர் – ஓடைப்பட்டி சாலையில் வனப்பகுதியை ஓட்டிய விவசாய நிலங்களில் அத்துமீறி கனிம வளங்கள் தினந்தோறும் கொள்ளையடிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

சின்னமனூர் – ஓடைப்பட்டி சாலையில் வனப்பகுதியை ஒட்டிய அமைந்துள்ள விவசாய நிலங்களில் இரவு, பகலாக கனிம வளங்கள் ஜேசிபி, ஹிட்டாச்சி, உள்ளிட்டை கனரக வாகனங்களை வைத்து கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் கிராம சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்து வருகிறது.

எனவே சின்னமனூர் – ஓடைப்பட்டி சாலை வனப்பகுதிகள் முழுவதும் கனிம வளங்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் கனிம வளங்கள் தினந்தோறும் விவசாய நிலங்களில் கொள்ளை அடிக்கப்படுகிறது.

இது குறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.