புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் வேளாண் துறை சார்பில் கோட்டுச்சேரி,நெடுங்காடு, திருமலை ராயன் பட்டினம் உள்ளிட்ட 11 இடங்களில் விவசாயிகள் நலன் கருதி உழவர் உதவியகம் செயல்பட்டு வருகிறது.

இங்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஊழியர்களுக்கு புதுச்சேரி அரசு இதுவரை பதவி உயர்வு வழங்க வில்லை, காலியாக இருக்கும், பணியிடங்களை கூட நிரப்ப நடவடிக்கை இல்லை என கூறி இரண்டாவது நாளாக கோரிக்கைகள் அடங்கிய கருப்பு பேட்ஜ் அணிந்து தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீண்ட கால கோரிக்கையை கூட புதுச்சேரி அரசு நிறைவேற்ற வில்லை என களப்பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் விவசாய பணிகள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கடும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.




