• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பிரபல தெலுங்கு நடிகர் சந்திரமோகன் மறைவு..!

Byவிஷா

Nov 11, 2023

பிரபல தெலுங்கு நடிகர் சந்திரமோகன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எம்ஜிஆர் நடித்த நாளை நமதே பட நடிகரும், பழம்பெரும் நடிகருமான மல்லம்பள்ளி சந்திர மோகன் இன்று காலமானார். அவருக்கு வயது 82. ஜூப்ளி ஹில்ஸில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சந்திர மோகன் இதயம் தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.45 மணியளவில் காலமானார்.
1966-ல் ரங்குல ரத்தினம் மூலம் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் கிட்டதட்ட 932 படங்களில் சந்திரமோகன் நடித்துள்ளார். பிரபல நடிகைகள் ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, ஜெயசுதா போன்ற நடிகைகளுடன் நடித்துள்ளார். சந்திர மோகன் பல நந்தி விருதுகளை வென்ற விருது பெற்ற நடிகர் ஆவார்.
சந்திர மோகனுக்கு மனைவி ஜலந்திரா மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் மூத்த திரைப்பட தயாரிப்பாளர் கே விஸ்வநாத்தின் உறவினர். சந்திர மோகனின் இறுதிச் சடங்குகள் நவம்பர் 13ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெறும். பல்துறை நடிகரின் திடீர் மறைவுக்கு தெலுங்கு திரையுலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

1943 மே மாதம் 23ந்தேதி பிறந்த சந்திர மோகனின் அசல் பெயர் சந்திரசேகர ராவ் மல்லம்பள்ளி. ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பமிடிமுக்குலா கிராமத்தில் பிறந்தார். ‘படஹரெல்லா வயசு’ படத்தில் நடித்ததற்காக சந்திர மோகன் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை (1979) பெற்றார். அவர் 1987 இல் சந்தமாமா ராவே படத்திற்காக நந்தி விருதை வென்றார். அதானொக்கடே திரைப்படத்திற்காக துணை நடிகராக மற்றொரு நந்தி விருதையும் வென்றார். குணச்சித்திரக் கலைஞராக பல படங்களில் நடித்துள்ளார். 7ஜி பிருந்தாவன் காலனியில் ஹீரோவின் அப்பாவாக நடித்தார். சந்திரமோகனின் கடைசிப் படம் ஆக்ஸிஜன்.
1975 ஆம் ஆண்டு எம்ஜிஆர் நடிப்பில் வெளியான நாளை நமதே படத்தில் அவரின் தம்பியாக நடித்திருப்பார். தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் சினிமாவில் கவனம் செலுத்தினார். தெலுங்கு சினிமாவில் அவர் சிறந்த நடிகருக்கான மாநில அரசின் நந்தி விருதைப் பெற்றுள்ளார். மேலும் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்