• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பிரபல பாடகர் கேகே மறைந்தார்…

Byகாயத்ரி

Jun 1, 2022

பிரபல பாடகர் கேகே என்பவர் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தது இசைஉலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி உள்பட பல அரசியல் தலைவர்களும் யுவன்சங்கர் ராஜா உள்பட பல இசையமைப்பாளர்கள் பாடகர் கேகே மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் கொல்கத்தாவில் பாடகர் கே.கே. மரணம் குறித்து, இயற்கைக்கு மாறான மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் இசை நிகழ்ச்சியின் போது நெஞ்சு வலிப்பதாக கே.கே. கூறியதை அடுத்து, மருத்துவமனைக்கு செல்லும் போதே அவர் உயிரிழந்துள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.