கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் வசித்து வருபவர் சித்திரவேல்(32). இவர் டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் சிபிஐ அதிகாரி என்று கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாகவும் பலரிடம் பணம் மோசடி செய்துள்ளார். மேலும் ஆன்லைனில் மோசடியும் செய்து வந்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் உள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு புகார் சென்றது.

சிபிஐ அதிகரிகள் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி, சித்திரவேலை கைது செய்து. வீட்டில் சோதனையிட்டபோது ஏராளமான போலி சிபிஐ அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கோவையில் தனி இடத்தில் மத்திய ஆயுதப்படை போலீஸ் உதவியுடன் சித்திரவேலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.
தொடர்ந்து, அவரை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சித்திரவேலை சிபிஐ அதிகாரிகள் டெல்லி அழைத்து சென்றனர்.