• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மோடி நினைத்தால் ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ்சை ஒன்றுசேர்த்து வைக்கலாம்-கே.பாலகிருஷ்ணன்!!!

ByA.Tamilselvan

Sep 2, 2022

மோடி நினைத்தால் ஓ.பி.எஸ்.-ஈ.பி.எஸ்சை கைகுலுக்கி வைத்து ஒன்றுசேர்த்து வைத்தாலும் வைக்கலாம் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி.
தேனி மாவட்டம் போடியில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசும் போது.. அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் இடையே கொள்கை அடிப்படையிலான தகராறு கிடையாது. அவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு சுலபமாக தீர்ந்துவிடும் என எதிர்பார்க்க முடியாது. அவர்கள் 2 பேரும் பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவிப்பதில் எந்தவித முரண்பாடும் இல்லாமல் செயல்படுகின்றனர். மாநில அரசின் உரிமைகள் பறிபோகும்போது அதற்காக குரல் கொடுக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. அதிகார போட்டி, பண பலம் ஆகியவற்றால் அவர்களுக்குள் இந்த மோதல் வெடித்துள்ளது. மீண்டும் மோடி அவர்களை கைகுலுக்கி வைத்து ஒன்றுசேர்த்து வைத்தாலும் வைக்கலாம். அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இருந்தபோதும் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அக்கட்சியின் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.