பெரம்பலூர் மாவட்டம், டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமிற்கு
ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன் தலைமை வகித்தார்!
கழக சட்ட திருத்த குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாமை துவக்கி வைத்தனர்!
பெரம்பலூர்,ஆக,05- டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க., பெரம்பலூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம், செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், நடைபெற்றது. ஆலத்தூர் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர் செ.வல்லபன் தலைமை வகித்தார். ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். கழக சட்ட திருத்த குழு இணைச் செயலாளர் சுபா.சந்திரசேகர்- பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு இலவச கண் சிகிச்சை முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். முன்னதாக டாக்டர் கலைஞர் அவர்களின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த கண் சிகிச்சை முகாமில் மதுரை அரவிந்த் தனியார் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினர், கண்புரை, கண்ணீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய் உள்ளிட்ட பல்வேறு கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம், பொம்மனப்பாடி, குரூர், சிறுவயலூர், நக்கசேலம், புது விராலிப்பட்டி, பழைய விராலிப்பட்டி, பெரகம்பி, மாவிலிங்கை, நாரணமங்கலம் , ஆலத்தூர்,இரூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து 500 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அறுவை சிகிச்சை தேவைப்படும் 200 நபர்களை வாகனம் மூலம் மதுரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த நிகழ்ச்சியில்,பொதுக்குழு உறுப்பினர் செ.அண்ணாதுரை, மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் எம்.ராஜ்குமார், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.நல்லதம்பி, வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தி.மதியழகன், வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சி.ராஜேந்திரன், பெரம்பலூர் நகர் மன்ற துணைத் தலைவர் து.ஆதவன்(எ)ஹரிபாஸ்கர், ஒன்றிய பெருந்தலைவர்கள் பிரபாசெல்லப்பிள்ளை , க.ராமலிங்கம், பூலாம்பாடி பேரூர் கழக செயலாளர் செல்வலெட்சுமி சேகர், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஆர்.வேணுகோபால், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெ.கார்மேகம், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி,மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வெ.ரமேஷ், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் மா.பிரபாகரன், ஆர்.அருண், மாவட்ட இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர் கே.ஜி.மாரிக்கண்ணன்,மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் செல்வராஜ், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் அ.இளையராஜா, கிளைச் செயலாளர்கள் மாணிக்கம், முத்துசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
