திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கேட்ட வரம் தரும்… தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு நத்தம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் மாசி திருவிழாவின் நிகழ்வாக புனிதமிக்க பூக்குழி கண் திறத்தல் நிகழ்வு நடைபெற்றது முன்னதாக மாரியம்மனுக்கு பால், இளநீர், சந்தனம், ஜவ்வாது, மஞ்சள், தேன், போன்ற 21 வகை அபிஷேகப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மல்லிகை, ரோஜா, முல்லை, அரளி, செம்பருத்தி, செவ்வரளி, தாமரை, கனகாம்பரம், சாமந்திப்பூ, செவ்வந்திப்பூ,தாழம்பூ, வாடாமல்லி, ஜாதிமல்லி, மலர்கள் கொண்ட வெள்ளி கவசத்தில் அலங்காரத்தில் தீபாராதனைகள். நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.