• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழக அரசு பள்ளிகளில் ஆக.25 முதல் காலை உணவு திட்டம் விரிவாக்கம்..!

Byவிஷா

Aug 18, 2023

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் முதல்வரின் காலை உணவு திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் விரிவுபடுத்தப்பட உள்ள நிலையில் தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்வரின் காலை உணவு திட்டம் தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகள் மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசு பள்ளிகளிலும் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு விரிவு படுத்தப்பட உள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் சார்ந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் மூலம் ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியரின் அறிவுரையை பெற்ற அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.