• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நஞ்சில்லா உணவு முறை மற்றும் பாதுகாப்பு குறித்த கண்காட்சி..,

Byமுகமதி

Dec 13, 2025

புதுக்கோட்டையில் இயற்கை விவசாயம், சிறுதானிய உணவு, நஞ்சில்லா உணவு முறை மற்றும் பாதுகாப்பு குறித்த கண்காட்சியும் கருத்தரங்கமும் நடைபெற்றது.

சிறுதானிய உணவு முறைகள், நோயில்லா வாழ்வியல் முறைகள் குறித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த நிகழ்வுக்கு ரோஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஆதப்பன் தலைமை வகித்தார். துணை இயக்குனர் திருமதி அகிலா பாரதி அனைவரையும் வரவேற்றார். இயற்கை வேளாண் வல்லுநர் மற்றும் இயற்கை மருத்துவர் கோ. சித்தர் இந்நிகழ்வில் கருத்துரையாற்றினார்.

நிகழ்வில் மேலும் புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் ஆதி சாமி, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் தீபக் குமார், முன்னோடி வங்கி மேலாளர் நந்தகுமார், ரோஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் ஜீவா, விஜயா ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

இளையோர் அமைப்பின் மாநில பொறுப்பாளர் சத்யா, மாநில துணை பொறுப்பாளர் சரவண பாபு, மையக்குழு உறுப்பினர்கள் மதுமிதா, மனோஜ், பெஸ்டின், தர்ஷினி, ராணா ஸ்ரீ, தேசிய குழந்தைகள் நாடாளுமன்றத்தின் உறுப்பினர் மணிமாறன் உள்ளிட்டோர் இயற்கை வளம், மண்வளம், தண்ணீர் வளம் கல்வியின் அவசியம், பணப் பரப்பை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் ஆகியவை குறித்து உரையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட இயற்கை வேளாண் வல்லுநர் மற்றும் இயற்கை மருத்துவர் கோ.சித்தர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் பேசுகையில் பெண்களுக்கு வரக்கூடிய பல்வேறு நோய்களுக்கு இயற்கையாகவே கிடைக்கக்கூடிய வாழைப்பூ வாழைத்தண்டு வாழைப்பழங்கள் மிகவும் சிறந்த முறையில் குணமளிக்கின்றன. ஆனாலும் மருத்துவமனைகளில் அதிக அளவு பெண்கள் தான் போய்ச் சேருகிறார்கள். அதற்குக் காரணம் உணவுப் பழக்க வழக்கங்கள் தான். இன்றைக்கு உள்ள நவநாகரிக உணவு என்று கருதிக் கொண்டு ரசாயன பொருட்கள் கலந்த விஷத்தன்மையை அதிகரிக்க கூடிய உணவுகளை உண்ணும் நிலைக்கு பலரும் தள்ளப்பட்டுள்ளோம்.

அதற்கு காரணம் பணிச்சுமை பொருளாதாரத் தேடல் என இருந்தாலும் ஆரோக்கியத்திற்கான தேடல் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். எவ்வளவு பொருளாதாரம் சொத்து சுகம் இருந்தாலும் நமக்கு வரும் நோயிலிருந்து நம்மால் காத்துக் கொள்ள முடியாது. ஆனால் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்கள் இருந்தால் அனைத்து நோய்களிலிருந்தும் விடுபட முடியும். அதனால்தான் இயற்கை விவசாயத்தை அனைவரிடத்திலும் வலியுறுத்த வேண்டி இருக்கிறது. பல நோய்களால் பாதிக்கப்பட்டு எந்த மருந்து மாத்திரையும் கேட்காத பட்சத்தில் இயற்கை உணவு முறை பழக்க வழக்கங்கள் நோயிலிருந்து மனித இனத்தை காப்பாற்றி விடுகின்றனர்.

பறவைகளும் விலங்குகளும் அவற்றின் தன்மைக்கு ஏற்ப உணவுப் பழக்கத்தை கொண்டு நோய் நொடி வராமல் பார்த்துக் கொள்கின்றன. மனிதர்கள் இப்போது தவறான உணவு பழக்க வழக்கங்களை எல்லாம் அறிந்து கொண்டு இயற்கை உணவுகள் பக்கம் சிறுதானிய உணவுகளின் வகைகளின் பக்கம் திரும்பி இருக்கிறார்கள். இதுதான் நீடித்த சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் நோயிலிருந்து மனித இனத்தை பாதுகாத்துக் கொள்ளவும் இருக்கக்கூடிய ஒரே வழியாகும் என்று பேசினார். ரோஸ் நிறுவன ஒருங்கிணைப்பாளர் பாலாஜி அனைவருக்கும் நன்றி கூறினார்.