• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பரவையில் கிராமப்புற பெண்கள் உற்பத்தி கைவினைப் பொருட்கள் கண்காட்சி

ByN.Ravi

Jun 11, 2024

மதுரை மாவட்டம் பரவை ஜி.எச்.சி. எல் பவுண்டேஷன் மீனாட்சி மில்ஸ் மற்றும் பெட் கிராட் இணைந்து கிராமப்புற பெண்கள் உற்பத்தி கைவினை பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி நடந்தது.
இந்த கண்காட்சிக்கு, மீனாட்சி மில்ஸ் முதன்மை நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். தொழில்சாலை தொடர்பு அதிகாரி அசோக்குமார், மூத்த பொது மேலாளர் ராஜகோபால், துறைத் தலைவர்கள் தினேஷ், கவ்ரவ், துணை மேலாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் அங்குசாமி வரவேற்றார். இந்த கண்காட்சியில், பரவை, தேனூர், திருவேடகம், நெடுங்குளம்,
திருவாலவாயநல்லூர் ஆகிய கிராமப்புறங்களைச் சேர்ந்த பெண்கள் 3 மாத பயிற்சி முடித்து குழுவாக உருவாக்கிய ஜூட் பேக், ஆரி எம்ப்ராய்டிங் ஆகியவற்றில் உற்பத்தி செய்த பொருட்களை கண்காட்சியில் வைத்திருந்தனர்.
இந்த கண்காட்சியில், பெட் கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம், பொருளாளர் சாரள் ரூபி, பயிற்சியாளர்கள் கண்ணன், முத்துசெல்வி மற்றும் ஆலை அலுவலக பணியாளர்கள், ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்காட்சி பார்வையிட்டு பொருட்களை வாங்கிச் சென்றனர். இதன் ஏற்பாடுகளை நிதி பங்களிப்பு அலுவலர் சுஜின் தர்மராஜ் செய்திருந்தார். முடிவில், பெட் கிராட் தலைவர் கிருஷ்ணவேணி நன்றி கூறினார்.