வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜய கரிசல் குளத்தில் மூன்று கட்டமாக அகழாய்வு பணிகள் நடைபெற்றன. அதில் 5000-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அகழாய்வு நடைபெற்ற இடத்தின் அருகில் கண் காட்சி யகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதனை விருதுநகர் மாவட்டம் மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களில் இருந்தும் பள்ளி, கல்லூரிகளை, சேர்ந்த மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் தொடர்ந்து பார்வையிட்டு வருகின்றனர். தற்போது காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஏராளமானோர் வருகை தந்து கண்காட்சி இடத்தில் வைக்கப்பட்ட அரிதான பொருட்களை ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

சென்னை மாகாணத்தில் இருந்து வருகை தந்தவர்கள் பொருட்களை பார்வையிட்டனர். மேலும் கிடைத்த பொருட்கள் பற்றியும் அதனை பயன்படுத்திய வருடம் குறித்தும் அகழாய்வு இயக்குனர் பொன் பாஸ்கர் விளக்கம் அளித்தார்.




