• Fri. Apr 26th, 2024

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு!

Byமதி

Nov 9, 2021

மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பின் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு. சேலம் ஈரோடு இடையே படகு போக்குவரத்து நிறுத்தம். அரசின் உத்தரவின்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள நிலையில் காவிரி கரையோரம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆய்வு….


மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 119 அடியாக அதிகரித்த நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக காவிரிக்கரை பகுதிகளான பூலாம்பட்டி கல்வடங்கம் தேவூர் உள்ளிட்ட இடங்களில் காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுகிறது. ஆற்றில் அதிக அளவு நீர் செல்வதால் பூலாம்பட்டி பகுதியில் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் பூலாம்பட்டியில் இருந்து ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டைக்கு படகுப் போக்குவரத்து காவிரி ஆற்றில் வழக்கமாக நடைபெற்று வருகிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மறு அறிவிப்பு வரும் வரை இந்த படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.


இதனிடையே பூலாம்பட்டி பகுதியில் வெள்ள தடுப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காவிரிக் கரையை ஒட்டிய வீடுகளுக்கு நேரில் சென்று பொதுமக்களிடம் பேசிய அவர் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார். ஆற்றிற்கு குளிக்கச் செல்வது செல்பி எடுக்க செல்வது ஆகியவற்றை தவிர்க்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *