• Sun. Apr 28th, 2024

சோழவந்தான் அரசு பள்ளிக்கு சேர் பெஞ்ச் உள்ளிட்ட உபகரணங்களை முன்னாள் மாணவர்கள் வழங்கினர்

ByKalamegam Viswanathan

Feb 5, 2024

சோழவந்தான் அரசன் சண்முகனார் அரசு மேல்நிலைப்பள்ளி மிகவும் பழமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்றாகும் இங்கே தமிழ்நாட்டிலே ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம் உள்ளது மதுரை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர் காலப்போக்கில் கிராமங்களில் பல்வேறு இடங்களில் பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டதால் இங்கு மாணவர்கள் எண்ணிக்கை குறைய தொடங்கியது இதனால் பள்ளி கட்டிடங்கள் பராமரிப்பு மற்றும் விளையாட்டுத் துறையில் ஆர்வம் குறைந்து வந்தது தற்போது பழமை வாய்ந்த இந்த பள்ளி கட்டிடத்தை பழமை மாறாமல் சுமார் ஐந்து கோடி ரூபாய் செலவில் அரசு புதுப்பித்து வருகிறது.

இந்த நிலையில் 1978 ஆம் ஆண்டு முதல் 80 ஆம் ஆண்டு வரை படித்த பழைய மாணவர்கள் மேஜை மற்றும் பெஞ்ச் வசதி இல்லாததது தெரிந்து சுமார் 50,000 செலவில் ஏழு செட்டு மேசை மற்றும் பெஞ்சுகள் இப்பள்ளிக்கு வழங்கினர். ஏற்கனவே இப்பள்ளி மராமத்துக்காக ரூபாய் 25000 வழங்கி உள்ளனர். தற்போது இந்த மேஜை மற்றும் பெஞ்சு வழங்குவதற்கான நிகழ்ச்சி இப்பள்ளியில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் தலைமை தாங்கினார். கணினி ஆசிரியர் கார்த்திக் குமார் வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் சார்பாக மருது சிராஜுதீன் பன்னீர்செல்வம் கிஷோர் அலி ஆகிய 35 மாணவர்கள் சேர்ந்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மராமத்து பணி மற்றும் மாணவிகளுக்கு மேஜை மற்றும் பெஞ்ச்கள் வாங்கிக் கொடுத்தனர். தமிழ் ஆசிரியர் பாலமுருகன் ஆசிரியை வில்லிபுஷ்பம் ஆகியோர் பள்ளி சார்பாக நன்றி தெரிவித்தனர். இதைப் பெற்றுக் கொண்ட மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்து முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *