• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கோவையில் பழைய குற்றவாளிகள், ரவுடிகள் கைது , 32 பேர் சிறையில் அடைப்பு..,

BySeenu

Mar 23, 2025

கோவை மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், ரவுடிகள் மற்றும் கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் மீது காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

அதன்படி மாவட்டம் முழுவதும் 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ரவுடிகள் மற்றும் கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள் என மொத்தம் 44 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் 38 பேர் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 32 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 12 பேர் நன்னடத்தை பிணையின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.

இந்த அதிரடி நடவடிக்கை தொடரும் என்றும், சட்டத்திற்குப் புறம்பாக ரவுடிசம், கட்டப் பஞ்சாயத்து மற்றும் சட்டவிரோதக் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடத்து உள்ளார்.