• Mon. Mar 23rd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

கணவனை பிரிந்து வாழும் இளம்பெண்ணை கத்தியால் குத்திய முன்னாள் காதலன் கைது

BySeenu

Feb 6, 2024

கோவை பேரூர் பகுதியைச் சேர்ந்த பிரீத்தி. திருமணம் ஆகி 1 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தனது கணவர் முகுந்தன் என்பவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரந்து தனது தாய் வீட்டில் வாழ்ந்து வருகிறார். கோவையில் உள்ள துணி கடையில் வேலை செய்து வரும் அவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது வீட்டில் அருகில் குடியிருக்கும் சண்முகசுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு தன்னை காதலிப்பதாக கூறி உள்ளார். அப்போது வேண்டாம் என்று கூறி நட்பாக பழகி வந்து உள்ளார் பிரீத்தி. இந்நிலையில் அவரது கணவருடன் வாழாதது தெரிந்து சண்முகசுந்தரம் பிரீத்தியின் ஒரு வயது குழந்தையை அவரது அம்மாவிடம் விட்டுவிட்டு வந்து அவரை திருமணம் செய்து கொள்ளுமாறு அடிக்கடி தொந்தரவு செய்து வந்து உள்ளார் இரவு வழக்கம் போல் வேலை முடித்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்த போது கோவையில் இருந்து சிறுவாணி செல்லும் சாலையில் பிரீத்தியை, சண்முகசுந்தரம் வழிமறித்து கெட்ட வார்த்தையால் பேசி குழந்தையை விட்டு விட்டு வருவையா ? மாட்டையா ? என்று கேட்ட உள்ளார். அப்போது பிரீத்தி எனக்கு குழந்தை தான் முக்கியம் என்று கூறி உள்ளார். உடனே அவர் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து பிரீத்தியின் வலது பக்க வயிற்றில் குத்தினார். சத்தம் போட்டு கீழே விழுந்த அவரை மீண்டும் காலால் உதைத்தும் முதுகில் இடது பக்கம் கத்தியால் குத்தி உள்ளார். அவர் சத்தம் போட சண்முகசுந்தரம் அங்கு இருந்து தப்பினார். அக்கம் பக்கம் இருதவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து பேரூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து காதலன் சண்முகசுந்தரத்தை கைது செய்தனர்.