• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

அண்ணாமலையை பார்த்தால் எல்லோருக்கும் பயம்

ByA.Tamilselvan

Aug 6, 2022

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை பார்த்தால் எல்லோரும் பயப்படுகின்றனர் எனபாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி‌.ரவி பேட்டி
சிதம்பரத்தில் நடைபெற உள்ள கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான் சி.டி‌.ரவி இன்று திருச்சி விமான நிலையத்திற்க்கு வந்தார். அவருக்கு, திருச்சி பாஜகவினர் வரவேற்பு அளித்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜகவின் நோக்கம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா வலிமையுடன் முன்னேறி சென்று கொண்டிருக்கிறது. பாஜகவில் உள்ள ஒவ்வொருவரின் கடமையும், ஒவ்வொரு இந்திய குடிமகனின் வளர்ச்சிதான்.5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரம் இருந்தால் காட்டச் சொல்லுங்கள். திமுக, காங்கிரஸின் நோக்கம் அவர்களது குடும்பத்தை வளர்ப்பதுதான்.
திமுக – காங்கிரசின் முழு நேர வேலையே ஊழல் செய்வது மட்டும்தான். ஆனால் எங்களுடைய வேலை மக்களுக்கான திட்டம், திட்டம், திட்டம் தான். நாங்கள் கட்சியை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.அண்ணாமலை தலைமையின் கீழ் நாங்கள் எல்லா மக்களின் கைகளைப் பிடித்து நடந்து கொண்டிருக்கின்றோம். மக்கள் சேவை மட்டும் தான் எங்களது ஒரே நோக்கம். நாளுக்கு நாள் பாஜக தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது.
அண்ணாமலையை பார்த்து எல்லோரும் பயப்படுகின்றனர். அவருடைய நடவடிக்கைகள், செயல் திட்டங்களை பார்த்து எதிர்க்கட்சியினர் பயப்படுகிறார்கள். இதன் அடிப்படையில் பாஜக தமிழகத்தில் வலுவாக இருக்கிறது.