• Tue. Nov 4th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

ஈரோடு தேர்தல் தமிழ்நாட்டில் ஒருமாற்றத்தை உருவாக்கி காட்டும்-செங்கோட்டையன்

ByA.Tamilselvan

Jan 29, 2023

தமிழ்நாட்டில் இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை உருவாக்கி காட்டும் எனஅ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டிளித்துளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். …எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் இது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவை எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா ஏன் உலகில் உள்ள அனைத்து தமிழ் சொந்தங்களும் இந்த இடைத்தேர்தலை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
எம்.ஜி.ஆர். தலைமையில் திண்டுக்கல்லில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது போன்று இந்த தேர்தலிலும் எடப்பாடி தலைமையில் வெற்றி பெறுவோம். இந்த தேர்தல் ஒரு மாற்றத்தை தமிழகத்தில் உருவாக்கி காட்டும். அ.தி.மு.க. கூட்டணியில் யார்? யார் ? இருக்கிறார்கள் என்பதை எடப்பாடி பழனிசாமி இன்னும் 3 நாட்களில் அறிவிப்பார். 98.5 சதவீத பேர் ஒரே அணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படுகிறோம். இந்த தேர்தலில் சரித்திர வெற்றி பெறுவோம். இதனை நம்பி நாங்கள் தேர்தல் களத்தில் இறங்கி இருக்கிறோம். எங்களது வேகம், விவேகம் மக்களை சந்திக்கும் விதம் போகப்போக தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.