• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தனியார் மயத்தை எதிர்த்து ஈரோடு மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் தர்ணா

ஈரோடு மாநகராட்சியில் துப்புரவு பொது சுகாதாரம் மற்றும் பொறியியல் துறைகளில் பல ஆண்டுகளாக பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்கள் ஈரோடு மாநகராட்சி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தமிழக அரசு புதிதாக தனியார் நிறுவனங்களைக் கொண்டு துப்புரவு பணிகளில் ஆட்கள் நியமிக்க மாநகராட்சி நகராட்சிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது மாநகராட்சியில் 1500 தொழிலாளர்கள் தின கூலி அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் பாதிக்கப்படுவார்கள் எனவே தனியார் மயமாக்கும் அரசு ஆணையை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாநகராட்சி மேயர் அலுவலகத்திலும் முற்றுகையிட்டு தங்கள் கோரிக்கைகளை மேயர் துணை மேயர் மற்றும் ஆணையரிடம் கூறினர். தனியார் துறை அனுமதிக்கப்பட்டால் துப்புரவு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சம்பளம் குறையும் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அவர்கள் அச்சம் தெரிவித்தனர். முன்பிருந்தது போலவே மாநகராட்சிக்கு கீழ் உள்ள சுய உதவி குழுக்கள் மூலம் தங்களது பணியை தொடர வேண்டும் தங்கள் பணி நிரந்தரப்படுத்த வேண்டும். அரசு வெளியிட்டுள்ள இப்பணிகளை தனியார் மையமாக்கும் அரசாணை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.