• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா

Byஜெ.துரை

Jan 17, 2023

சென்னை வடபழனியில் உள்ள தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் தலைமை அலுவலகத்தில் தென் சென்னை மாவட்டம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் வழித்துணை பாபா கூட்டு பிரார்த்தனை நிறுவனர் பாபா ராம்ஜி தலைமை தாங்கினார். வடபதி ஆதீனம் மற்றும் கே. எம் அசன், முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினர்களாக அனைத்துக் மக்கள் கட்சி நிறுவனர் ராஜேஸ்வரி பிரியா மற்றும் ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


விழாவில் பேசிய பாபா ராம்ஜி மண்பானையில் சிலுவை சங்கு சக்கரம் பிறை என்று மூன்று படம் போட்டு பொங்கல் வைத்து அனைத்து மதமும் ஒன்றுதான் என்ற அடிப்படையில் இந்த சமத்துவ பொங்கல் கொண்டாடுகிறோம் என்று கூறினார்.இதனை தொடர்ந்து பேசிய டிஎஸ்ஆர் சுபாஷ் தமிழர்களின் அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுவது தான் இந்த தமிழர் திருநாள் என்றும் உலகெங்கும் இருக்கும் அனைத்து தமிழர்களையும் இதயங்களையும் ஒன்றினைக்கும் பாலமாக இருப்பது தான் இந்த சமத்துவ பொங்கல் என்றும் கூறினார்.
அதன் பின்பு பேசிய வடபாதி ஆதீனம் மத நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் வலியுறுத்தி நடத்துவதே இந்த சமத்துவ பொங்கல் என்றும் கூறினார்.