• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

சென்னை வில்லிவாக்கத்தில் சமத்துவப் பொங்கல் விழா

Byஜெ.துரை

Jan 16, 2023

சென்னை, வில்லிவாக்கத்தில் 18 அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் 324 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் உள்ள வீட்டு உரிமையாளர்கள் பொது நலச் சங்கத்தின் சார்பில் சாதி மத பேதமின்றி அனைவரும் ஒன்று கூடி101 பொங்கல் பானை வைத்து சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.


இந்த சமத்துவப் பொங்கல் விழாவிற்கு பொதுநலச் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஆதிலிங்கம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் டாக்டர் சுரேஷ் பாலகிருஷ்ணன், செயலாளர் ம. நிர்மல் ஆகியோர் முன்னிலை வைகித்தனர்.
விழாவினை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் அ.வெற்றி அழகன் சமத்துவப் பொங்கல் விழாவைத் தொடங்கி வைத்தார். சென்னை பெருநகர மாநகராட்சி எட்டாவது மண்டலத் தலைவரும் 95வது வட்ட கவுன்சிலருமான கூ.பி.ஜெயின் மற்றும் 100-க்கும் மேற்பட்ட மகளிர்கள் இந்த சமத்துவப் பொங்கலை கொண்டாடினர்.