• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரை மாநகராட்சியில் மேயர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி

ByKalamegam Viswanathan

Apr 13, 2023

மதுரை மாநகராட்சியில் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது
டாக்டர் அம்பேத்கர், பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் நாளை ஆண்டுதோறும் “சமத்துவ நாள்” ஆக கடைப்பிடிக்க தமிழகஅரசு உத்தரவிடப் பட்டுள்ளது.
அதன்படி, மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் “சமத்துவ நாள்” உறுதிமொழியினை மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் அனைத்து பணியாளர்களும், (13.04.2023) ஏற்றுக் கொண்டனர். “சமத்துவ நாள் உறுதிமொழி” சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து போராடி ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும், வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து எளிய மக்களின் உரிமைகளைப் பற்றி விழிப்புணர்வை ஊட்டிய நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளில்,
சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சகமனிதர்களைச் சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காணமாட்டேன் என்றும், சகமனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்றும் உளமார உறுதி ஏற்கிறேன் என்று, மேயர் அவர்கள் வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில், துணை மேயர் தி.நாகராஜன், துணை ஆணையாளர்கள் முஜிபூர் ரகுமான், தயாநிதி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி ஆணையாளர் (கணக்கு) விசாலாட்சி, உதவி ஆணையாளர் (பணி) ஆறுமுகம், கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்