• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ் படங்களை கிழித்து எறிந்த இபிஎஸ் ஆதரவாளர்கள்!

ByA.Tamilselvan

Jun 27, 2022

அதிமுக தலைமைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர்களிலிருந்து ஓபிஎஸ் படங்களை பிளேடால் கிழித்து எரிந்து வருகின்றன இபிஎஸ் ஆதரவாளர்கள்.
அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த 23-ந்தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் பங்கேற்றிருந்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷ மிட்டதால் ஓ.பன்னீர்செல்வம் பாதியிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கிடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி இன்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதையொட்டி அங்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் படங்களுடன் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு அணிகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனர்களில் இடம் பெற்றிருந்த ஓ.பன்னீர்செல்வம் படத்தை எடப்பாடி பழனிசாமி ஆதரவு தொண்டர்கள் பிளேடால் கிழித்து எறிந்தனர். இதனால் தலைமை கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.